உலகளாவிய ஐடி சந்தையில், சீனாவை விட இந்தியா முன்னிலை
உலகளாவிய ஐடி சந்தையில், சீனாவை விட இந்தியா முன்னிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்,
சீனாவை சேர்ந்த ஐடி வல்லுநர் மைக் லியு. இந்தியா மற்றும் சீனாவின் பல முன்னணி ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமுடைய இவர் 'இந்திய தகவல் தொழில்நுட்பத்தின் எழுச்சி' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இவர் உலகளாவிய ஐடி சந்தையில், சீனாவை விட இந்தியா முன்னிலையில் இருப்பதாக கூறியுள்ளார். உலகச் சந்தைகளில் இந்திய ஐடி நிறுவனங்கள் ஆட்சி செய்வதாக கூறும் அவர், சீனாவின் தொழில்நுட்ப வருமானம் பெரும்பாலும் உள்நாட்டில் இருந்தே கிடைப்பதாக தெரிவிக்கிறார்.
அதாவது, சீனாவின் தகவல் தொழில்நுட்ப வருவாயில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்நாட்டு சீன சந்தையில் இருந்து வருகிறது, என்கிறார் மைக் லியு. சர்வதேச சந்தைகளில் கால் பதிக்க சீன ஐடி நிறுவனங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.