இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

பாரதி திரைப்படத்தில் 'மயில் போல' பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

Update: 2024-01-25 15:06 GMT

சென்னை,

இளையராஜாவின் மகள் பவதாரிணி (வயது 47)உடல்நலக்குறைவால் காலமானார். இளையராஜாவின் மகளான பவதாரிணி இன்று மாலை 5.30 மணியளவில் காலமானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.பாரதி படத்தில் மயில் போல, ராமர் அப்துல்லா படத்தில் என்வீட்டு ஜன்னல் உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார். பாரதி திரைப்படத்தில் 'மயில் போல' பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இசையமைப்பில் பாடல்களை பாடியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப்பின் 3 திரைப்படங்களுக்கு பவதாரிணி இசையமைத்து வந்தார்.

இளையராஜா இசையமைத்த ராசய்யா படத்தில் மஸ்தானா...மஸ்தானா... படல் மூலம் பாடகியாக அறிமுகமானார். சனிக்கிழமை நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவும் தற்போது இலங்கையில் உள்ளார். ரேவதி இயக்கத்தில் ஷோபானா நடித்த மித்ர் மை ப்ரெண்ட் படத்திற்கு பவதாரிணி இசையமைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்