பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியது. சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ததையடுத்து சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.