ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் தஹி என கட்டாயமில்லை - இந்திய உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம்
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் தஹி எனக்குறிபிட வேண்டிய கட்டாயமில்லை என இந்திய உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கர்ட் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு அவரவர் மாநில மொழிகளிலும் அச்சிட்டுக்கொள்ளலாம்.தயிரை தஹி,மொசரூ, ஜாமூத் டவுத், தயிர், பெருகு என மாநில மொழிகளில் எப்படி வேண்டுமானாலும் குறிப்பிடலாம். தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் தஹி என அச்சிட வலியுறுத்திய அறிவிக்கையை வாபஸ் பெற்றது இந்திய உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம்.