திருச்சி சம்பவம் தொடர்பாக திமுக நிர்வாகிகள் 4 பேர் அதிரடி சஸ்பெண்ட்

Update: 2023-03-15 11:55 GMT

திருச்சி சம்பவம் தொடர்பாக திமுக நிர்வாகிகள் 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை, மாவட்ட துணை செயலாளர் முத்துசெல்வம், திருச்சி மாவட்ட திமுக பொருளாளர் துரைராஜ், 55-வது வட்ட செயலாளர் ராமதாஸ் ஆகியோர் கட்சியில் இருந்த தற்காலிகமாக நீக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்