தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் வரும் 20-ம் தேதி ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.