இன்றைய ராசிபலன் - 24.10.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

Update: 2024-10-24 00:59 GMT

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் ஐப்பசி மாதம்-நாள்  7-ம் தேதி வியாழக்கிழமை

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 12-10 வரை புனர்பூசம் பின்பு பூசம்

திதி: இன்று மாலை 06-59 வரை சப்தமி பின்பு அஷ்டமி

யோகம் :அமிர்த யோகம்

நல்ல நேரம்: மாலை 10-45 to 11-45

ராகு காலம்: பிற்பகல் 1-30 to 3-00

எமகண்டம்: காலை 6-00 to 7-30

குளிகை: காலை 9-00 to 10-30

கௌரி நல்ல நேரம்: காலை 12-15 to 1-15

கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30

சூலம்:தெற்கு

சந்திராஷ்டம்: அனுஷம், கேட்டை

மேஷம்

சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

ரிசபம்

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த சில முக்கிய ஆலோசனையை இன்று நடத்துவீர்கள்.வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். ரசனைக்கேற்ப வரன் அமையும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். சிலருக்கு வெளிமாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

மிதுனம்

வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். தாய்வழி சொத்து வந்து சேரும்.வியாபாரத்தில் ஆர்வம் மிகும். உத்யோகத்தின் பொருட்டு நீங்கள் பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள், பிரச்னைகள் தீரும். வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

கடகம்

தம்பதிகள் தங்கள் அன்பை புரிந்து கொள்வர். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.ஒரு சிலர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு கடையை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் வரும் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் கிரே

சிம்மம்

மனைவி வழியில் உதவிகள் உண்டு. ஆனால், மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும்.அமைதி காக்கவும். அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

கடையை விரிவுப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

கன்னி

விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். உயர்கல்வியில் நாட்டம் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். தம்பதிகள் சுப காரியங்களில் கலந்துகொள்வர். மொத்ததில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

துலாம்

உத்யோகஸ்தர்கள் தங்கள் சக ஊழியர்களிடம் அமைதியாக செல்வது நல்லது. நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

விருச்சிகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான விசயமாக இருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளளாம்.புதிய முயற்சிகள் வேண்டாம். இன்று இறைவனை பிரார்த்தித்து கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்வது தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

தனுசு

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவர். அரசியல்வாதிகள் பொது இடத்தில் வெளிப்படையாகப் பேசி சிக்கிக் கொள்ள வேண்டாம். நட்பு வட்டம் விரிவடையும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பழுதான வாகனம் சரி செய்வீர்கள். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

மகரம்

வியாபாரிகளின் தங்கள் கனவு நிறைவாகும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்துச் செல்லும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். உத்யோகஸ்தர்களுக்கு சம்பள பாக்கி கைக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

கும்பம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் நிம்மதி கிடைக்கும்.

வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பிரபலங்கள் உதவுவார்கள். சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

மீனம்

திருமணமானவர்கள் தங்கள் நீண்ட நாள் ஆசையான குழந்தைப்பேறு கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வசதி, வாய்ப்புகள் பெருகும்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை




 


Tags:    

மேலும் செய்திகள்