இன்றைய ராசிபலன் - 22.10.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

Update: 2024-10-22 01:14 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஐப்பசி மாதம் 5-ம் தேதிசெவ்வாய்க்கிழமை

நட்சத்திரம்: இன்று காலை 11.55 வரை மிருகசீரிடம் பின்பு திருவாதிரை

திதி: இன்று காலை 08.12 வரை பஞ்சமி பின்பு சஷ்டி

யோகம்: சித்த, மரண யோகம்

நல்ல நேரம் காலை: 07.45 - 8.45

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் மாலை: 03.00 - 04.30

எமகண்டம் காலை: 09.00- 10.30

குளிகை மாலை: 12.00 - 1.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டம் சுவாதி, விசாகம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

ஏற்றுமதி, இறக்குமதி சிறப்பாக நடக்கும். பல பெரிய ஆர்டர்கள் குவியும். பிள்ளைகள் தாங்கள் நினைத்த பாடப்பிரிவில் சேருவதற்காக நல்ல மதிப்பெண்களை பெற முயற்சி செய்வர். அரசியலில் நல்ல பொறுப்பு வழங்கப்படும். தம்பதிகளிடையே சிறு வாக்குவாதங்கள் வந்தால் கூட விட்டுக் கொடுத்து போவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

ரிஷபம்

தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். ஆதலால், அதில் ஒரு பகுதியை விற்று கடனை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். சகோதர, சகோதரி வழிகளில் உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்க நல்ல நேரம்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்

உறவினர்களுடன் அமைதி காப்பது நல்லது. தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். பொறுமையை கையாளுங்கள். கடன் சுமையை எண்ணி கவலைப்பட வேண்டாம். வாகனக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். பிள்ளைகள் நன்கு படிப்பர். ஆன்மீகத்தில் நாட்டம் கூடும். வெளியூரிலிருந்து நற்செய்தி கிடைக்கும்,

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்

கணவன் மனைவி உறவு சமூகமாகச் செல்லும். பெற்றோர்கள் தங்கள் வளர்ச்சியைப் பார்த்து பூரிப்பர். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். உடல் நலம் சிறப்பாகும். திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு தாங்கள் கனவு கண்ட மாதிரியே தங்களுக்கு நல்லதொரு துணை கிடைக்கும். தேக ஆரோக்கியம் சிறப்படையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

பணப்பற்றாக்குறை இருக்காது. பணம் தாராளமாக புழங்கும். இன்று நினைத்த காரியத்தை முடித்து மகிழ்ச்சியடைவீர்கள். குடும்பத் தலைவர்களுக்கு அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். குடும்பத் தலைவிகளுக்கு உடல் நலத்தில் கை, கால் மூட்டுகளில் வலி தோன்றும். நல்ல இயற்கை வைத்தியரை நாடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கன்னி

பண வரவு தாமதப்படும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் அதனை தங்கள் சக ஊழியர்களின் உதவியால் முடித்து விடுவீர்கள். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். வியாபாரத்தில் உள்ளவர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

துலாம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

விருச்சிகம்

உடல் நலத்தில் கவனம் தேவை. கூடுமானவரை வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தம்பதிகளிடத்தில் அன்பு பெருகும். இருவரும் இணைந்து எந்த முடிவாக இருந்தாலும் சேர்ந்து எடுப்பர். எதிர்பார்த்த கல்வி நிறுவனங்களில் தங்களுக்கு இடம் கிடைக்க வேண்டுமென்றால் தாங்கள் நன்கு படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

தாயார் வீட்டிற்கு சென்று தாயாருக்கு வேண்டிய உதவிகளை நிறைவேற்றுவீர்கள். தங்கள் எதிர்காலத்திற்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதற்கென்று ஒரு சிறு தொகையை சேமிப்பீர்கள். கணவர் வழி உறவினர்கள் வீட்டிற்கு வந்து செல்வர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். குடும்பத் தலைவிகள் தங்கள் உறவினர்களின் வீட்டு விசேஷத்திற்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கும்பம்

பணப்புழக்கம் நன்றாக இருக்கும். அதில் ஒரு பகுதியை எடுத்து சேமிக்கத் துவங்குவர். உறவினர்கள் வந்து போவர். புதுமண தம்பதிகளிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டுக் கொடுத்து செல்வதும் மௌனத்தை கையாள்வதும் நல்ல புரிதலை உருவாக்கும். யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். வீட்டுச் செலவுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும். ஆனாலும், தங்கள் தொழிலில் நல்லதொரு பணத்தொகை வந்து சேரும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மாமியார் உடல் நலம் தேறும். பணப்பற்றாக்குறை விலகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்



 


Tags:    

மேலும் செய்திகள்