இன்றைய ராசிபலன் - 20.10.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

Update: 2024-10-20 00:52 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஐப்பசி மாதம் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

நட்சத்திரம்:இன்று பிற்பகல் 01.23 வரை கிருத்திகை பின்பு ரோகினி

திதி: இன்று காலை 11.09 வரை திரிதியை பின்பு சதுர்த்தி

யோகம்: சித்த, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை: 07.45 - 08.45

நல்ல நேரம் மாலை: 03.15 - 4.15

ராகு காலம் மாலை: 04.30 - 6.00

எமகண்டம் மதியம்: 12.00 - 1.30

குளிகை மாலை: 03.00 - 4.30

கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45

கௌரி நல்ல நேரம் மாலை 1.30 - 2.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: அஸ்தம், சித்திரை

இன்றைய ராசிபலன்:

மேஷம்

தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் இருந்து சம்பந்தம் தேடி வரும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

ரிஷபம்

தம்பதிகள் சமாதானமடைவர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். அரசியல்வாதிகள் தங்கள் கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஷேர் மூலம் பணம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

மிதுனம்

தம்பதிகளின் வாழ்வில் வசந்தம் வீசும். கசந்த காதல் இனிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். வெளியே செல்லும் போது தலைக்கவசம் அணிவதன் மூலம் அபராதத்தினை தவிர்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கடகம்

தம்பதிகளிடத்தில் ஒற்றுமை பலப்படும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு விரும்பிய துறைகள் கிடைத்து தங்கள் எதிர்கால தேவையை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்களின் உயர்கல்வி சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கவலை வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

வெளியே செல்லும் போது தங்கள் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளவும். முதியவர்கள் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நோயிலிருந்து தப்பிக்கலாம். தாங்கள் விரும்பிய காரியத்தை முடிக்க தன்னம்பிக்கையும், துணிச்சலும் வரும். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

விருச்சிகம்

குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் தங்கள் மனைவி ஒத்துழைப்பார். தம்பதிகளிடத்தில் அன்பு மேலோங்கும். பிள்ளைகள் தங்கள் சொல்படி கேட்பர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை நம்புங்கள். நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வெளி உணவுகளை தவிர்க்கவும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். பற்று வரவு வசூலாகும். உடல் நலனில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மகரம்

சகோதர வகையில் அனுகூலம் உண்டு. பேசும் போது யோசித்து பேசவும். வியாபாரம் செழிக்கும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டு. பெண்களின் திருமண கனவு நிறைவேறும். உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வெளியே செல்லும் முன் வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, பிரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். மகான்கள், ஆன்மீகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். புது பதவிகள் தேடி வரும். சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும். கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

 

Tags:    

மேலும் செய்திகள்