இன்றைய பஞ்சாங்கம்:-
குரோதி வருடம் கார்த்திகை மாதம் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
நட்சத்திரம்: இன்று இரவு 08.53 வரை ரோகினி பின்பு மிருகசீரிஷம்
திதி: இன்று அதிகாலை 01.38 வரை பிரதமை பின்பு துவிதியை
யோகம்: சித்த, அமிர்த யோகம்
நல்ல நேரம் காலை: 7.45 - 8.45
நல்ல நேரம் மாலை: 3.15 - 4.15
ராகு காலம் காலை: 04.30 - 06-00
எமகண்டம் காலை: 12.00 - 1.30
குளிகை மாலை: 3.00 - 4.30
கௌரி நல்ல நேரம் காலை: 10.45 - 11.45
கௌரி நல்ல நேரம் மாலை: 1.30 - 2.30
சூலம்: கிழக்கு
சந்திராஷ்டம்: சித்திரை, சுவாதி
ராசிபலன்:-
மேஷம்
உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் கேட்ட சலுகைகள் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு சிக்கன நடவடிக்கைகள் தேவை. தம்பதியிடையே விட்டுக் கொடுப்பது நல்லது. மாமனார் மாமியார் உறவில் சிறு சிறு வாக்குவாதம் உண்டாகும். பொறுமை அவசியம். பெண்களுக்கு கை கால் வலி தொந்தரவு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம்
தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்திற்காக ஒரு சிறு தொகையை சேமிக்க துவங்குவார். மாணவர்கள் கவன சிதறலை தவிர்த்து படிப்பில் ஆர்வம் கொள்வது நல்லது. சுய தொழில் செய்யும் பெண்கள் நஷ்டம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமானால் சிறு முதலீடே நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மிதுனம்
வெளியூர் நற்செய்தி வந்து சேரும். குடும்பத் தலைவிகளுக்கு விலை அதிகமான வீட்டு பொருட்களை கணவர் ஆர்டர் செய்வார். சுய தொழில் செய்பவர்களுக்கு தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த வெளியூர்களுக்கு சென்று வருவர். இளம் பெண்களுக்கு திருமணம் செட் ஆகும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு இன்சன்டிவ் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கடகம்
குடும்பத் தலைவிகள் அத்தியாவசிய பொருள்களுக்கு மட்டும் செலவு செய்வது நல்லது. மாமனார் மாமியார் தங்களிடம் அன்பு பாராட்டுவர். மாணவர்கள் சற்று அலட்சிய போக்கை நிறுத்திவிட்டு நன்கு படிக்கவும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
சிம்மம்
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நீண்ட நாட்களாக தொந்தரவு செய்த நபர் உங்களிடம் சரண் அடைவார். கணவர் வீட்டார் வீட்டிற்கு வந்து போவர். குடும்பத் தலைவிகள் செலவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்வர். உடல் நலனில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கன்னி
குடும்பத் தலைவிகளுக்கு நீண்ட நாட்களாக இருந்த நகை கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் அதிக கவனம் செலுத்தி மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவர். சுய தொழில் செய்யும் அழகு கலை நிபுணர்களுக்கு லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
துலாம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
விருச்சிகம்
கணினி துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். குடும்பத் தலைவிகளுக்கு தங்கள் நிர்வாக திறனை பார்த்து வியந்து தங்கள் கணவர் உங்களிடம் சரணடைவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு புதிய புதிய திறனை வளர்த்துக் கொள்வார்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
தனுசு
பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அதிகம் ஆர்வம் ஏற்பட்டு அதிக மதிப்பெண்களை பெறுவர். கணவர் வீட்டார் உங்களை பாராட்டுவர். தம்பதிகள் ஒற்றுமை காப்பர். உடல் நலனில் ஒற்றைத் தலைவலி வந்து போகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மகரம்
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். கணவனின் தம்பி வகை உறவினர்களிடம் வாக்குவாதம் வந்து போகும். அவர்களை அனுசரிப்பது நல்லது. சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடனுக்காக தங்கள் குழுவுடன் சேர்ந்து அரசு வங்கியை அணுகுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கும்பம்
குடும்பத் தலைவிகளுக்கு அக்கம் பக்கத்து வீட்டார் அவர்களிடம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் அமைதியான போக்கே நிலவும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். மாணவமணிகளுக்கு பகுதி நேரமாக விளையாட்டு துறையில் அக்கறை செலுத்துவர். உடல்நலம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மீனம்
உத்தியோகதர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதனை சரிவர செய்து முடிப்பீர்கள். தம்பதிகளிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் அன்பு அதிகரிக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு தங்கள் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்று வருவார். பல் வலி வந்து போகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை