எக்காரணம் கொண்டும் பழைய கடனை அடைக்க, புதிய கடன் வாங்க வேண்டாம். தொழில் செய்பவர்கள், அதில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். அதே நேரம் உங்கள் பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் இருந்த மனக் கசப்பு விலகும். உடல்நலனில் கவனம் தேவை. திடீர் பயணம் ஏற்படும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.