உற்சாகமாகப் பணியாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!
ஞாயிறு பகல் 12.44 மணி முதல் செவ்வாய் மாலை 3.56 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சில செயல்களில் மட்டுமே வெற்றிபெற முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, சக ஊழியர்களின் விடுமுறையால் வேலைப்பளு அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்க்கும் பணவரவுகள் சிறிது தள்ளிப்போக நேரிடும். மேலதிகாரிகளின் கேள்விக்கு சிலநேரங்களில் பதில் சொல்ல முடியாமல் தடுமாற வேண்டியதிருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களில் சிலருக்கு, பழைய வாடிக்கையாளர்கள் மூலம் புதிய நபர்களின் அறிமுகமும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் போட்டிகளால் லாபம் சிறிது குறையலாம். குடும்பத்தில் பழைய கடன் தொல்லைகளால் சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். கலைஞர்கள் தங்கள் பணிகளில் கவனமாக இருப்பது புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.