மற்றவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
பண வசதி பெருகும் வாரம் இது. குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிரிந்து சென்ற சிலர் மீண்டும் வந்து சேர்ந்துகொள்வர். எதிர்பாராத திருப்பங்களைச் சந்திப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு சம்பள உயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். புதியவர்களிடம் அலுவலகம் சம்பந்தமான விஷயங்களைப் பேசாதிருப்பது நல்லது.
சொந்தத் தொழிலில் நல்ல திருப்பங்கள் வந்துசேரும். வாடிக்கையாளர்களின் நிலுவைகள் வசூலாகும். கூட்டுத்தொழிலில், கூட்டாளிகளின் ஆலோசனையைப் பெற்று நிர்வாகத்தை நடத்துங்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும், நன்றாக நடைபெற்று வரும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் கவனம் செலுத்துவர். பங்குச்சந்தையில் போதிய வருமானம் உண்டு.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள்.