உறுதியான உள்ளம் கொண்ட ரிஷப அன்பர்களே!
செவ்வாய் பகல் 12.30 மணி முதல் வியாழக்கிழமை பிற்பகல் 3.22 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பயணத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு, பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கூடுதல் வருமானம் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கப் பயன்படும். கூட்டு வியாபாரத்தில் பணம் சம்பந்தப்பட்ட பொறுப்பில் உள்ளவர்களை அடிக்கடி கண்காணிக்காவிட்டால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரலாம். குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் கடன் பிரச்சினைகளை பெண்கள், தங்கள் சிறு சேமிப்புகளால் சரிசெய்து விடுவார்கள். மகன் அல்லது மகளின் மூலம் மனதுக்கு சங்கடம் உண்டாகலாம். கலைஞர்களுக்கு பாராட்டு தேடி வரக்கூடும். பங்குச்சந்தை வியாபாரம் பரபரப்பாக நடைபெறும்.
பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சூரியனுக்கு சிவப்பு மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.