திட்டமிட்டு செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!
வியாழன் அன்று சந்திராஷ்டமம் உள்ளதால், முக்கிய விஷயங்களில் அவசரம் காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள், பல காலமாக எதிர்பார்த்த காரியம் ஒன்று திடீரென்று முடிவுக்கு வரலாம்.
சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு பழைய வாடிக்கையாளர் ஒருவரால், புதிய நபர் அறிமுகமும், அதனால் தொழில் முன்னேற்றமும் ஏற்படும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்துசேரும். கூட்டாளிகளுடன் கலந்து பேசி கணக்குகளில் உள்ள குழப்பத்தை சரி செய்வீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கலாம். கலைஞர்கள், புதிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வெளியூர் பயணிப்பார்கள். பிரபல நிறுவனத்தின் ஒப்பந்தத்தால் பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் சீரான போக்கு காணப்பட்டாலும், அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகளும் ஏற்படத்தான் செய்யும்.
பரிகாரம்:- சனி பகவானுக்கு சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட்டால் சங்கடங்கள் தீரும்.