எந்த செயலையும் அழகாக செய்யும் ரிஷப ராசி அன்பர்களே!
வெள்ளி மற்றும் சனிக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், சிரமமான சூழ்நிலையே காணப்படும். என்றாலும் தெய்வ அருள் துணை நிற்கும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகம் தொடர்பான விஷயங்களில் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதனால் ஒரு சில சலுகைகள் கிடைக்கலாம்.
தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் வேகமான முன்னேற்றத்தைக் காண இயலாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள், ஓரளவு திருப்திகரமான வியாபாரத்தால் மகிழ்ச்சி அடைவார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
மாணவர்கள், தேர்வில் முன்னிலை பெறும் நோக்கத்துடன் படிப்பார்கள். குடும்பத்தில் பெண்களுக்கு, சில உடல் உபாதைகள் வந்து தொல்லை தரலாம். பிள்ளைகளின் திருமண பேச்சு முடிவாகும்.
பரிகாரம்:- திங்கட்கிழமை சந்திர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், சிரமங்கள் குறையும்.