எழுத்து வல்லமை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
பழைய பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து மகிழ்ச்சியடைவீர்கள். செயல்கள் பலவற்றில் முயற்சியால் முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சகப் பணியாளர்களின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டியதிருக்கும்.
சொந்தத் தொழில் செய்பவர்களில் சிலருக்கு, புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் அதிக வருமானம் கிடைக்கக்கூடும். பணிகளை விரைந்து முடித்துக் கொடுக்க, ஓய்வின்றி உழைப்பீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் சற்று அதிகமாகும்.
குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும், பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. கலைத்துறையில் இருப்பவர்கள் கால நேரம் பார்க்காமல், பணிகளைச் செய்து உயர்வான இடத்தை அடைவார்கள். பங்குச்சந்தை லாபம் தர சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.
பரிகாரம்: பார்வதி தேவிக்கு திங்கட்கிழமை நெய் தீபம் ஏற்றி வணங்கினால் செல்வமும், புகழும் உண்டாகும்.