உங்கள் முயற்சியால் தடைகளைத் தாண்டி வெற்றி காண்பீர்கள். நல்லவர்கள் சந்திப்பு முன்னேற்றம் தரும். மேற்கில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்திலிருந்து வரவேண்டிய பாக்கியைப் பெற்று மகிழக்கூடும். அவசரமாகப் புதிய வேலை ஒன்றைச் செய்து முடிக்க வேண்டிய அவசியம் நேரலாம். சிலர் வெளியூருக்கு இடமாற்றமும் சம்பள உயர்வும் பெற்று செல்லக் கூடும். சொந்த தொழில் செய்பவர்கள் அதிகமான பணிகளையும், நல்ல ஆதாயத்தையும் பெறுவர். கூட்டுத் தொழிலில் வருமானம் பெருகும். குடும்பத்தினர் வீட்டுக்குத் தேவையான நவீனப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும். பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்பார்க்கும் லாபம் பெறுவர். இந்த வாரம் புதன்கிழமை நவக்கிரக சன்னிதியிலுள்ள புதபகவானுக்கு தீபமிட்டு வழிபாடு செய்வது நல்ல பலனைத்தரும்.