கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!
சிலவற்றில் தடை இருந்தாலும், உங்கள் முயற்சியால் பலவற்றில் வெற்றிபெறுவீர்கள். நல்லவர்கள் சந்திப்பும், அதனால் காரிய வெற்றியும் கிடைக்கும். வரவேண்டிய பணம், கைக்கு வந்துசேரும். உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய சலுகை கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். அவசரமாக புதிய வேலைஒன்றை செய்து முடிக்க வேண்டிய அவசியம் உண்டாகலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், அதிகமான பணிகளையும், நல்ல ஆதாயத்தையும் பெறுவர். பணிக்கேற்ப உதவியாளர்களைக் கூடுதலாக சேர்த்துக்கொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்கும். ஊழியர்களுக்கு கூடுதல் தொகை அளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். வீட்டுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைஞர்கள், பிரபல நிறுவனத்தில் இருந்து புதிய ஒப்பந்தம் பெற்று மகிழ்வர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை நவக்கிரக சன்னிதியில் உள்ள புத பகவானுக்கு நெய் தீபமிடுங்கள்.