07-07-2023 முதல் 13-7-2023 வரை
எழுத்துத் திறமை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும், சில காரியங்களில் மட்டுமே திருப்தி காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் தவறு, அதிகாரிகளை கோபம் அடையச் செய்யும். பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். ஓய்வு நேரம் குறையும்.
கூட்டுத் தொழில் செய்பவர்கள், வியாபாரத்தை விரிவுபடுத்த கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பார்கள். போட்டிகள் தலை காட்டுவதால் வியாபார வளர்ச்சியும், லாபமும் குறையலாம். கணக்குகளை அவ்வப்போது கண்காணிப்பது அவசியம். குடும்பத்தில் சிறு சிறு கடன் தொல்லை ஏற்படலாம். இருப்பினும் அவற்றை குடும்பத்தில் உள்ள பெண்களே சாமர்த்தியமாக சமாளித்து விடுவர். கலைஞர்கள், புதிய வாய்ப்பு பெற தீவிரமாக முயற்சிப்பர். பங்குச்சந்தை லாபத்திற்கு, அன்றாட நிலவரங்களை கவனியுங்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை புவனேஸ்வரி அம்மனுக்கு மலர் மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றுங்கள்.