உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, இதுவரை இருந்த தொல்லைகள் அகலும். அலுவலக ரீதியிலான சலுகைகள் உடனடியாக கிடைக்கும். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் திருப்தியை கருதி செயல்படுங்கள். குடும்பத்தில் சுபச்செலவு ஏற்படும். சிலர் புது வீடு கட்டி குடியேற வாய்ப்புண்டு. கணவன்- மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். இந்த வாரம் சனிக்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுங்கள்.