மிதுனம் - வார பலன்கள்

Update: 2023-03-30 20:14 GMT

கற்பனை வளம் நிறைந்த மிதுன ராசி அன்பர்களே!

தளர்வடைந்த காரியங்களில், தக்க நபர்களின் உதவியோடு வெற்றி பெறுவீர்கள். வருமானம் பெறுவதில் அலைச்சல்கள் இருக்கும். ஏதாவது ஒரு வழியில் தேவையற்ற செலவுகள் தலைதூக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகலாம். உயரதிகாரிகளின் விருப்பப்படி நிறுத்தி வைத்த பணியினை விரைந்து செய்து முடிக்கும் நிலை ஏற்படும். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களுக்கு பணிகளை முடித்துக் கொடுக்க இரவு- பகல் பார்க்காமல் உழைப்பார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும். வியாபார முன்னேற்றம் பற்றி பங்குதாரர்களுடன் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்படத்தான் செய்யும். அவற்றைப் பெண்களே சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார நிறைவு பெறுவர்.

பரிகாரம்:- இந்த வாரம் ெசவ்வாய்க்கிழமை, துர்க்கைக்கு மலர் மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றுங்கள்.

மேலும் செய்திகள்