மிதுனம் - வார பலன்கள்

Update: 2023-01-26 19:47 GMT

நீதி நெறியில் பற்று கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

எளிதில் வெற்றிபெறும் என்று கருதிய வேலை ஒன்று, கடுமையான முயற்சிக்கு பிறகே முடிவுக்கு வரும். வரவேண்டிய பணத்தைப் பெற அதிக அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் பணியையும் சேர்த்து செய்யும் நிலை ஏற்படக்கூடும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள், சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழில் மேன்மைக்குப் புதிய திட்டம் ஒன்றை போடுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். குடும்பத்தில் சொத்துக்களால் சில பிரச்சினைகள் உருவாகலாம். பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கலைஞர்கள் கடினமான பணிகளில் பங்கேற்பீர்கள். சகக் கலைஞர்களுக்கும் உதவி செய்யும் வாய்ப்பு கிடைக்கும். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. புதிய நண்பர்களால் முதலீடு அதிகரிக்கும்.

பரிகாரம்:- வெள்ளிக்கிழமை மாரியம்மனுக்கு, செவ்வரளி மலர் சூட்டி வழிபட்டால் வந்த வினை அகன்றுவிடும்.

மேலும் செய்திகள்