மிதுனம் - வார பலன்கள்

Update: 2022-11-10 19:51 GMT

தேர்ந்த நுண்ணறிவுடன் பழகும் மிதுன ராசி அன்பர்களே!

உங்களது முயற்சி நல்ல பலன் தரும். தள்ளிப்போன வரவுகள், தானே வந்து சேர்ந்திடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், முக்கிய பணி ஒன்றில் கவனம் செலுத்துவார்கள்.

சொந்தத் தொழிலில் வாய்ப்புகள் சுலபமாகக் கிடைத்திடும். வேலையை விரைந்து முடித்திட, உதவியாளர்கள் துணைபுரிவார்கள். கூட்டுத் தொழிலில் வழக்கமான லாபம் கிடைக்கும். தொழில் போட்டிகளை சமாளிக்க, பங்குதாரர்களுடன் ஆலோசிப்பீர்கள்.

குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும், பெண்கள் அதனை சமாளித்துவிடுவார்கள். ஆரோக்கிய குறை ஏற்படலாம். குலதெய்வ வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள், புதிய வாய்ப்புகளைப் பெற்ற போதிலும், வருமானம் போதுமானதாக இருக்காது. பங்குச்சந்தை லாபம் கைக்கு கிடைக்க தாமதமாகும்.

பரிகாரம்: பெருமாளுக்கு புதன்கிழமை அன்று துளசி மாலை அணிவித்து வழிபட்டால் எல்லா வளமும் வந்துசேரும்.

மேலும் செய்திகள்