பழைய பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து மகிழ்ச்சியடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள், சகப் பணியாளர்களின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டியதிருக்கும். தொழிலில், புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினை இருந்தாலும், பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. இந்த வாரம் திங்கட்கிழமை, சந்திர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்.