காரியங்கள் பலவற்றிலும் வெற்றி பெற தீவிர முயற்சி தேவைப்படும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு விரும்பியபடி இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் லாபம் அதிகரித்தாலும் செலவு கூடும். குடும்பத்தில் தோன்றும் சிறுசிறு பிரச்சினைகளை, இல்லத்தில் உள்ள பெண்களே சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கை அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபாடு செய்யுங்கள்.