எந்தச் செயலையும் திறம்படச் செய்யும் மிதுன ராசி அன்பர்களே !
தந்தை வழி உறவுகளால் சிறு மனவருத்தம் ஏற்படும். இருந்தபோதும் உங்கள் முயற்சியால் பிரச்சினை விலகி ஆனந்தம் வந்துசேரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் ஏற்பட்ட சிறு தவறினால் உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வேலைகளில் கவனமும், நிதானமும் தேவை. சகப் பணியாளர் ஒருவரின் வேலையை சேர்த்துச் செய்ய வேண்டியதிருக்கும். சொந்தத் தொழிலில் வாடிக்கையாளரின் திருப்தியை சம்பாதிக்க ஓய்வின்றி உழைப்பீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள், வேலைக்காரர்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்க்கும் லாபத்தைப் பெற முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பிரச்சினைகள் எழலாம். சிறுசிறு கடன்களை அடைத்து விடுவீர்கள். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் புதிய வாய்ப்புகளைப்பெற அதிக முயற்சி செய்வீர்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு சிவப்பு நிற மலர் மாலை சூட்டுங்கள்.