07-07-2023 முதல் 13-7-2023 வரை
கடினமானதை எளிதில் செய்யும் மிதுன ராசி அன்பர்களே!
சில காரியங்களில் முன்னேற்றமும், சில காரியங்களில் தேக்க நிலையும் ஏற்படும். பணவரவு தாமதமாகும். அக்கம் பக்கத்தினரின் மத்தியில், உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், செய்யும் வேலைகளில் சிரமங்கள் இருந்தாலும், உயரதிகாரிகளின் ஆதரவால் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவர். அலுவலக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மை அளிக்கும்.
சொந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தொல்லைகள் இருந்தாலும், ஆதாயம் குறையாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள், போட்டிகளை சமாளிக்கக் கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு கடன் பிரச்சினை வந்து போகும். பெண்கள் குடும்ப வேலைகளில் ஈடுபடும்போது கவனமாக இருங்கள். கலைஞர்கள், சக நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சிவப்பு மலர் மாலை அணிவித்து வணங்குங்கள்.