காரியங்களை திறம்பட செய்து வெற்றிகாணும் மேஷ ராசி அன்பர்களே!
பணிகளில் முயற்சியுடனும், உற்சாகத்துடனும் செயல்பட்டு முன் னேற்றமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயரதிகாரிகளின் விருப்பப்படி அவசியமான வேலை ஒன்றை விரைவாகச் செய்து கொடுத்துப் பாராட்டு பெறுவார்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தள்ளிப்போகலாம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, புதிய நபர்களால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். பணிகளை விரைந்து கொடுப்பதற்காக ஓய்வின்றி உழைப்பீர்கள். கூட்டுத் தொழிலில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்பட தீவிர முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இருப்பினும் லாபம் சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில், விருந்தினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகும். பெண்களுக்கு உடல்நல பாதிப்பு உண்டாகலாம். கலைஞர்களுக்கு பழைய ஒப்பந்தங்களிலேயே, பணவரவு ஏற்படும்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு சிவப்பு வண்ண மலர்மாலை சூட்டுங்கள்.