மேஷம் - வார பலன்கள்

Update: 2023-03-30 20:09 GMT

திறமையோடு செயல்படும் மேஷ ராசி அன்பர்களே!

சில காரியங்களில் நண்பர்களின் உதவியோடு முன்னேறுவீர்கள். வரவேண்டிய பணவரவு, அலைச்சலுக்குப் பிறகே கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் பணிகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். நீங்கள் செய்யும் சிறிய தவறும் உயரதிகாரிகளுக்குப் பெரிதாகத் தோன்றலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளருக்கான பணியை விரைந்து செய்து கொடுத்து பாராட்டுப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் குறையாது. போட்டிகள் இருக்குமாதலால் பங்குதாரர்களிடம் ஆலோசித்து நல்ல முடிவெடுப்பீர்கள். குடும்பம் சிறு சிறு தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். பெண்கள், உறவினர் வீட்டு சுபகாரியங்களில் பங்கேற்கும்போது கருத்து வேறுபாடு ஏற்படலாம். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்றாலும், எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்காது.

பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு சிவப்பு மலர் மாலை சூட்டி வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்