நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேஷ ராசி அன்பர்களே!
உங்களது அன்றாடப் பணிகளில் வெற்றி கிடைக்கும். கலைத்துறை மற்றும் இசைத்துறையினருக்கு நல்லதொரு வாய்ப்பு உருவாகும். புதுப்பட ஒப்பந்தங்களும், பெரிய மனிதர்களின் நட்பும் கைகொடுக்கும். பொருளாதார நிலை மேம்பட்டு, பழைய கடன்கள் குறைவதால் மனநிம்மதி அடைவீர்கள். நிதி சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பழைய தேக்கநிலை மாறும். எதையும் சுலபமாக சாதிப்பீர்கள்.
குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு மறையும். கடந்த காலத்தில் இழுபறியாக இருந்து, உங்கள் மனதை அலைக்கழித்து வந்த ஒரு விஷயம், தற்போது நல்ல முடிவை எட்டும். பழைய பாக்கிகள் வசூலாகும். பெண்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். புதிய திட்டங்களை தீட்டும் முன்பு, பெரியவர்களுடன் ஆலோசிப்பது நல்லது.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை, நவக்கிரக சன்னிதியில் உள்ள குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.