மேஷம் - வார பலன்கள்

Update: 2023-02-02 19:43 GMT

பாசத்துடன் பழகும் மேஷ ராசி அன்பர்களே!

காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி தாமதமாகும். நிதானமாக செயல்பட்டால் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், தள்ளி வைத்த வேலையை உடனடியாக செய்யும் நிலை உருவாகும்.

சொந்தத்தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளர் ஒருவரின் வேலையை அதிக ஈடுபாட்டுடன் செய்து முடிப்பார்கள். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். கூட்டுத் தொழிலில் கணிசமான லாபம் கிடைக்கலாம். வாடிக்கையாளர்களிடம் திருப்தி காணப்படும். பங்குச்சந்தை வியாபாரம் நன்றாக நடைபெறும்.

கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்ச்சியுடன் பணியாற்றுவார்கள். சகக் கலைஞர்களும் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்து வரும் சிறு கடன்களை அடைத்து விடுவீர்கள். பெண்கள் குடும்பத்தின் நலன் கருதி வேலைக்குச் செல்ல முயற்சி மேற்கொள்வார்கள்.

வழிபாடு:- புதன்கிழமை அன்று சக்கரத்தாழ்வாருக்கு, நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் செல்வ வளம் சேரும்.

மேலும் செய்திகள்