மேஷம் - வார பலன்கள்

Update: 2023-01-19 19:45 GMT

வேலைகளை நுணுக்கமாக செய்யும் மேஷ ராசி அன்பர்களே!

குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் வாரம் இது. பல்வேறு காரணங்களால் வெவ்வேறு இடங்களில் பிரிந்து வாழ்ந்த தம்பதியர், இனிமேல் ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள். தொழில் துறையினர் படிப்படியாக வளர்ச்சி நிலையை அடைவார்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரச்சினைகளை கையாளும்போது பொறுமையாகவும், அமைதியாகவும் செயல்படுங்கள்.

உத்தியோகஸ்தர்கள் அவர்களது அன்றாட அலுவல்களில் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள், குடும்ப நிர்வாகத்தை சிறப்பாக செய்து வருவார்கள். இல்லத்தில் மகிழ்ச்சியும், நற்பெயரும் ஏற்படும்.

கலைஞர்களுக்கு புதிய நண்பர் ஒருவர் அறிமுகம் ஆவார். அவரால் பல நன்மைகள் வந்துசேரும். அரசாங்க உதவி கிடைக்கும். பங்குச்சந்தையில் லாபம் பெற, அன்றாட நிலவரங்களை கண்காணித்து வாருங்கள்.

பரிகாரம்:- சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் தடைகள் அகலும்.

மேலும் செய்திகள்