மேஷம் - வார பலன்கள்

Update: 2023-01-12 19:48 GMT

கருத்துமிகு எழுத்தாற்றல் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே!

செவ்வாய் காலை 8.47 மணி முதல் வியாழன் பகல் 12.32 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சில காரியங்களில் தளர்வு ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்பு தேடிவரும். உத்தியோகத்தில் கவனமாக இல்லாவிட்டால், உயரதிகாரிகளின் கோபத்திற்கு இலக்காக நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளரின் அவசரம் கருதி பணிகளை விரைந்து செய்து கொடுக்க வேண்டியதிருக்கும். கூட்டுத் தொழிலில், போட்டியாளர்களை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், அவை பெண்களால் சாமர்த்தியமாக சமாளிக்கப்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும், எதிர்பார்க்கும் வருமானம் கிடைப்பது சந்தேகம்தான். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும். அதிக லாபம் பெற, நண்பர்களின் ஆலோசனை தேவைப்படும்.

பரிகாரம்:- சிவ வழிபாட்டிற்குரிய பொருட்களை இயன்ற அளவு வாங்கிக் கொடுப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் செய்திகள்