சலிக்காமல் காரியங்களைச் செய்யும் மேஷ ராசி அன்பர்களே!
எந்த முயற்சியிலும் துணிந்து ஈடுபடும் சிறப்பான வாரம் இது. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். ஜாதக ரீதியாக கிரகங்கள் பலம் பெற்றிருப்பவர்களுக்கு, வருமானங்கள் பெருகி மகிழ்ச்சிப்படுத்தும்.
கலைஞர்கள் செழிப்பான வாழ்க்கையைக் காண்பார்கள். தொழில் செய்பவர்களுக்கு, எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. மாணவர்களுக்கு கடினமான வாரம் இது. படிப்பில் நாட்டம் இருக்காது. மனம் சோர்வடையும்.
பெண்களுக்கு, மனம் மகிழ்ச்சியில் துள்ளும் வகையில், இல்லத்தில் பல நிகழ்வுகள் நடைபெறும். சமையல் பணியில் ஈடுபடும் போது கவனம் தேவை. கணவன் - மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்லும் மனநிலை காணப்படும். புனிதப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய் தீபமேற்றி வணங்குங்கள்.