தர்மம் செய்வதில் ஈடுபாடு கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
இந்த வாரம் கூடுமானவரை நன்மையான பலன்களையே எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கைகூடும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் ஒரு சிலருக்கு சலுகைகள் கிடைக்கும்.
தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பார்கள். இரவு - பகலாக உழைத்து வாடிக்கையாளர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள், பண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். கலைஞர்கள் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.
மாணவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவதோடு, பாடங்களைப் படிப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். அரசியல் துறையில் இருப்பவர்கள், வெற்றியை தக்கவைக்க போராடுவீர்கள். குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை காணப்படும். தனவரவு இருந்தாலும், மருத்துவச் செலவு ஏற்படும்.
பரிகாரம்:- இந்த வாரம் முழுவதும் ஸ்ரீராமஜெயம் எழுதி வாருங்கள். ராமனின் அருளால் துன்பங்கள் மறையும்.