மேஷம் - வார பலன்கள்

Update: 2022-12-15 19:50 GMT

திறமையால் பாராட்டு பெறும் மேஷ ராசி அன்பர்களே!

புதன் மற்றும் வியாழக்கிழமையில் சந்திராஷ்டமம் உள்ளதால், ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கும். 'பிறகு செய்யலாம்' என்று தள்ளிவைத்த பணி ஒன்றை உடனே செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். சொந்தத்தொழில் செய்பவர்கள், ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கூட்டுத்தொழிலில் போதிய வருமானம் கிடைக்கும். பங்குச்சந்தையில் அதிக லாபம் கிடைக்க கொஞ்ச காலம் பொறுத்திருங்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவர். புதிய வாய்ப்புகள் பெற சகக்கலைஞரின் ஒத்துழைப்பையும், உதவியையும் பெற முற்படுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். திட்டமிட்ட சுபகாரியங்கள் நடந்தேறும்.

பரிகாரம்:- பெருமாளுக்கு புதன்கிழமை துளசி மாலை சூட்டி வழிபாடு செய்வது துன்பங்களை விலக்கும்.

மேலும் செய்திகள்