நீதி, நேர்மை மிகுந்த மேஷ ராசி அன்பர்களே!
உத்தியோகத்தில் சற்று நிதானமாகவும் எச்சரிக்கையாகவும் நடந்து கொள்ளவேண்டியது மிக அவசியம். உயர் அதிகாரிகளிடம் அனுசரணையான எந்த சலுகைகளையும் பெற இயலாது. சக ஊழியர்கள் சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
தொழில் செய்பவர்கள், என்னதான் முயற்சி செய்தாலும், ஓரளவே முன்னேற்றம் காண முடியும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அதன் மூலம் பணவரவும் கூடுதலாக இருக்கும். சகக் கலைஞர்களின் குடும்பத்திற்கு உதவி செய்வீர்கள்.
மாணவர்கள், கல்வியில் முன்னேற்றமான பாதையைக் காண்பீர்கள். குடும்பத்தில் பெண்கள் மகிழ்ச்சிகரமான நற்பலன்களைப் பெறுவார்கள். என்றாலும் உடல்நிலையில் சிறுசிறு கோளாறுகள் ஏற்படும். பங்குச் சந்தை வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். அன்றாட நிலவரங்களை கவனிப்பது நல்லது.
பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு தீபமேற்றி வழிபாடு செய்தால் துன்பங்கள் விலகும்.