கம்பீரமான தோற்றம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
வெள்ளிக்கிழமை காலை 8.08 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், காரியங்களில் நிதானம் தேவை. இல்லத்தில் இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் நடைபெறும்.
குறிப்பிட்ட தொழில் செய்பவர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வெற்றி நிச்சயம் என்றாலும் கவனமுடன் இருங்கள். உங்கள் செயலில் காணப்படும் தேக்க நிலை, தோல்வியை உண்டாக்கக்கூடும். சீட்டுப் பணம் மற்றும் கடன் கொடுத்த தொகையை வாங்கும் நேரத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
புதிய முயற்சியில் ஈடுபடுவோரும், புதிய தொழில் தொடங்குபவர்களும் நன்கு ஆலோசித்து முடிவு எடுக்கவும். சிலருக்கு விரும்பாத இடத்தில் பணிபுரிய வேண்டிய வாய்ப்பு வரலாம். உணவு விஷயத்தில் கவனத்துடன் இருங்கள். சொத்துக்களை பாகப்பிரிவினை செய்வதை தள்ளிப்போடுவது நல்லது.
பரிகாரம்:- நவக்கிரக சன்னிதியில் உள்ள செவ்வாய் பகவானுக்கு நெய்தீபம் ஏற்றினால் வெற்றிக்கான வாய்ப்பு தேடி வரும்.