நினைத்த காரியத்தை முடிக்கும் மேஷ ராசி அன்பர்களே!
புதன்கிழமை மாலை 4.41 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சிறு சிறு தொல்லைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் அனைவருமே உங்களுக்கு எதிராக இருப்பது போல் தோன்றும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்புரிவோர், தொழிலை விரிவுபடுத்துவதோ, தொழிலை மாற்றுவதோ செய்ய வேண்டாம். அதே சமயம் பிற தொழில் செய்பவர்கள், புதியதாக வரும் வாய்ப்புகளை தவற விட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதோடு, நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய தருணம் இது. பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது, கவனமாக இருங்கள். அரசியலில் உள்ளவர்கள் எதிரிகளை வெல்வர். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் ஒரு சிலருக்கு பெருமை வந்து சேரும்.
பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால் காரியங்கள் இனிதே நடந்தேறும்.