தர்மம் செய்வதில் விருப்பம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
கொடுக்கல் - வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள், உயர் அதிகாரியின் உத்தரவுப்படி, அவசர வேலை ஒன்றை செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். சக ஊழியர்கள் தக்க நேரத்தில் கைகொடுத்து உதவுவார்கள்.
சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைகளில் பயன்பெற, அதிகநேரம் உழைக்க நேரிடும். கூட்டுத்தொழிலில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலை விஸ்தரிக்க பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்துவீர்கள்.
குடும்பத்தில் பிரச்சினை எதுவும் இன்றி சீராக நடைபெறும். சிறிய கடன்களை அடைத்து மகிழ்வீர்கள். கலைத் துறையினரில் சிலருக்கு கடின முயற்சிக்குப் பின்னரே வாய்ப்புகள் கிடைக்கும். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராகவே இருக்கும். நண்பர்களின் ஆலோசனை வெற்றிக்கு வழிவகுக்கும்.
பரிகாரம்: சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ஒப்பற்ற வாழ்வு மலரும்.