அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்
தோல்வியால் துவளாத நெஞ்சம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
சனிக்கிழமை பகல் 12 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றிகரமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சக ஊழியரின் பணியையும் சேர்த்து செய்ய வேண்டியதிருக்கும். சொந்தத் தொழிலில், லாபத்தைப் பெற்றுத் தரும் ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். கூட்டுத்தொழில் வியாபாரம் நன்றாக நடைபெறும். புதிய தொழில் தொடங்குவதற்கான எண்ணம் மேலோங்கும். பங்குச்சந்தை வியாபாரம் லாபத்தைப் பெற்றுத் தரும். புதிய நண்பர்கள் சேருவார்கள். கலைஞர்கள், பெரிய நிறுவனங்களில் இருந்து வந்த ஒப்பந்தங்களை மனதில் கொண்டு பணியில் சுறுசுறுப்பு காட்டுவார்கள். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும். தன வரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
பரிகாரம்:- மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை அன்று செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் வறுமை பறந்தோடும்.