உத்தியோகம் அல்லது கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் தடை நீங்கி நன்மை உண்டாகும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் பெறுவீர்கள். தொழில் செய்பவர்களுக்கு செல்வாக்கு கூடும். வாடிக்கையாளர் திருப்திகொள்ளும் வகையில் பணியை முடித்துக் கொடுப்பீர்கள். தம்பதிகளுக்குள் இருந்து வந்த மனக்கசப்பு மறையும். பெண்கள் கவனமாக செயல்படுங்கள். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டுங்கள்.