உத்தியோகத்தில் கவனமாக செயல்படுங்கள். மேலதிகாரிகளால் நன்மை கிடைக்கும். தொழில் செய்வோா் கோபத்தை வெளிக்காட்டாதீர்கள். குடும்பத்தில் தம்பதிகளுக்குள் சிறு மனக்கசப்பு தோன்றி மறையும். திருப்தியான வருவாய் அமையாது. பெண்கள் புதிய வேலைக்கு முயற்சித்தால் அது கிடைக்கும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள்.