4.8.2023 முதல் 10.8.2023 வரை
சோதனையைக் கண்டு கவலைப்படாத மேஷ ராசி அன்பர்களே!
உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்தபடியே இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கலாம். அலுவலகம் பற்றி புதிய நபர்களிடம் பேசும்போது கவனம் தேவை. சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளர்களின் மூலம் பணிகளைப் பெறுவீர்கள். ஏற்கனவே செய்து கொடுத்த வேலையில் ஏற்பட்ட குறைபாட்டினை சரிசெய்து கொடுக்க நேரிடும்.
கூட்டுத்தொழில் சுமாராக நடைபெற்றாலும், வழக்கமான லாபம் குறையாது. போட்டியாளர்களை சமாளிப்பது பற்றி, கூட்டாளிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவினாலும், அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகளும் ஏற்படத்தான் செய்யும். இல்லத்தில் சுபகாரியம் செய்வது பற்றி முடிவெடுப்பீர்கள். கலைஞர்கள், சகக் கலைஞர்களின் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெறுவர். பங்குச்சந்தை வியாபாரம் சுமாரான லாபம் தரும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் மாலை சூட்டுங்கள்.