ஜான் மகேந்திரனின் நடுவுல கொஞ்சம் இசையை காணோம் - இளையராஜா ரசிகர்களுக்கு மட்டும்
பலர் கவனிக்க தவறிய இளையராஜாவின் இசை பக்கத்தை பற்றியும், அது ஒரு திரைப்படத்தில் செய்த மாற்றத்தை பத்தியும் ஜான் மகேந்திரன் பகிர்கிறார்.;
லைக்கா மியூசிக் நிறுவனம், நடுவுல கொஞ்சம் இசைய காணோம் என்கிற தலைப்பில், சச்சின் பட இயக்குனர் ஜான் மகேந்திரன் வழங்க ஒரு இசை தொடரை வெளியிட்டு இருக்கிறது.
சிறு வயதிலிருந்து, இளையராஜா அருகில் தான் ரசித்த பல அனுபவங்களையும், கோடிகணக்கான ரசிகர்கள் ரசிக்கும் பாடலுக்கு பின்னால் நடந்த சுவையான சம்பவங்களையும், ரசிகர்கள் கேட்டிராத இளையராஜா பாடல் பதிவின் போது தான் கண்ட பல ஆச்சர்யமான நிகழ்வுகளை பற்றியும் ஜான் மகேந்திரன் பகிர்கிறார்.
இதுவரை இளையராஜாவின் பாடல்கள் பற்றியும், பின்னணி இசை பற்றியும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருந்தும், லைக்கா மியூசிக்கில் வரும் இந்த தொடரில் , பலர் கவனிக்க தவறிய இளையராஜாவின் இசை பக்கத்தை பற்றியும், அது ஒரு திரைப்படத்தில் செய்த மாற்றத்தை பத்தியும் ஜான் மகேந்திரன், ஒரு இளையராஜா ரசிகராக பகிர்கிறார்.
இத்தொடர், இளையராஜா ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், இன்றைய இளம் இசை அமைப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் , இளையராஜாவை பற்றி, அவர் இசையை பற்றிய ஒரு பரிமாணத்தை காட்டும்.