இன்றைய ராசிபலன் - 17.08.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

Update: 2024-08-17 00:50 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆவணி மாதம் 1ம்-தேதி சனிக்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 10.35 வரை பூராடம் பின்பு உத்திராடம்.

திதி : இன்று காலை 05.25 வரை துவாதசி பின்பு திரயோதசி

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 07.45 - 08.45

நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45

ராகு காலம் காலை : 9.00 - 10.30

எமகண்டம் மாலை : 1.30 - 3.00

குளிகை காலை : 6.00 - 7.30

கௌரி நல்ல நேரம் காலை : 10.45 - 11-45

கௌரி நல்ல நேரம் மாலை : 9.30 - 10.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : கிருத்திகை, ரோகிணி

இன்றைய ராசிபலன்:

மேஷம்

ஒரு குறிப்பிட்ட தொகையை தொழிலில் முதலீடு செய்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவுவர். தங்கள் துணையிடம் பெண்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கும். பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : நிறம்

ரிஷபம்

இன்று கார்த்திகை, ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் தாங்கள் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்க வேண்டாம். யாரிடமும் வாக்குவாதம் செய்யவேண்டாம். அது பிரிவினில் முடித்துவிடும். மிருகசீரிடம் நட்சத்திரகாரர்கள் தங்கள் பணிகளை துவங்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மிதுனம்

இன்று வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிவிடுவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவர். குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள் நல்ல செய்தியுடன் வருவர். உடல் நலனில் அக்கறை கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

கடகம்

உறவினரிடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் மகிழ்வார்கள். தங்கள் கீழ் பணியுரியும் வேலைக்காரர் இது நாள் வரை ஏமாற்றி இருந்ததை தாங்கள் கையும் களவுமாக பிடித்துவிடுவீர். வெளிநபருக்கு உதவி செய்து பின்பு வருந்துவதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

சிம்மம்

சினிமா, நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வாங்கிய கடனை அடைத்து இன்புறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாக பொறுப்புகள் கூடும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் நன்கு படிக்க ஆரம்பிப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கன்னி

பெண்களின் முக்கிய எதிர்பார்ப்புகளை தங்கள் கணவர் பூர்த்தி செய்வார். வியாபாரிகளுக்கு பெரும் தொகை கைக்கு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய பட ஒப்பந்தம் கையெழுத்தாகும். செய்யும் தொழிலில் செழிப்பு உண்டாகும். உத்யோகத்தில் அலுவலகத்தில் இருந்த மந்தநிலை மாறும். விளையாட்டுத்துறையில் மாணவர்களுக்கு ஆர்வம் மிகும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

துலாம்

பிள்ளைகளின் திருமண முயற்சிகள் வெற்றி தரும். பண உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் மகிழ்ச்சி தரும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் அதிகரித்து மேல் படிப்பிற்காக முயற்சி எடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

விருச்சிகம்

கலைஞர்களின் கனவு நனவாகும். தம்பதிகளிடையே சண்டை வராமல் தடுக்க வாய் வார்த்தைகளை குறைப்பது நல்லது. வியாபாரிகள் கடின உழைப்பில் அதிக லாபம் ஈட்டுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

தனுசு

சிலர் வீடு, மனை வாங்குவதற்காக இன்று அதற்குண்டான முயற்சியில் ஈடுபடுவர். திடீர் பயணம் உற்சாகம் தரும். விவசாயிகளுக்கு அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவர். பெண்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். தந்தையிடம் வாக்குவாதம் வேண்டாம். தந்தையுடன் இணக்கமுடன் இருந்தால் தங்களுக்கு நன்மை செய்வார். நெருங்கிய நண்பர்கள் தங்களிடம் கொண்டிருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு பாராட்டுவார்கள். தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கும்பம்

விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் உண்டாகும். பெற்றோர்களது கனவை நிறைவேற்றுவீர்கள். தம்பதிகளிடையே மனஸ்தாபம் உண்டாகும். அமைதியை கடைபிடிக்கவும். காதலர்களின் அன்பு பலப்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒரு பகுதிக் கடனை அடைத்து விடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

மீனம்

தங்களுக்கு வெளியூர் செல்லும் திட்டம் உருவாகும். தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும். காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். விவசாயிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். கலைஞர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

Tags:    

மேலும் செய்திகள்