இன்றைய ராசிபலன் - 30.08.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

Update: 2024-08-30 01:25 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் ஆவணி மாதம் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை

நட்சத்திரம்: இன்று இரவு 09.09 வரை புனர்பூசம் பின்பு பூசம்

திதி: இன்று அதிகாலை 04.38 வரை ஏகாதசி பின்பு துவாதசி

யோகம்: சித்த, மரண யோகம்

நல்ல நேரம் காலை: 12.15 - 10.15

நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45

ராகு காலம் காலை: 10.30 - 12.00

எமகண்டம் மாலை: 3.00 - 4.30

குளிகை காலை: 7.30 - 9.00

கௌரி நல்ல நேரம் காலை: 1.45 - 2.45

கௌரி நல்ல நேரம் மாலை: 6.00 - 7.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்

இளம் பெண்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர சகோதரிகளால் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனைத்து வேலைகளும் முடித்து விடுவீர்கள். அலைச்சலால் தலைவலி உண்டாகும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உணவில் கவனமுடன் இருப்பது நல்லது. புதிய வாகனம் ஒன்றை இன்று பார்த்து முன்பணம் கொடுத்து வருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கோபம் வரும் போது பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும். சகோதர சகோதரி உறவில் அன்பு கூடும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் நன்கு படிப்பர். தேகம் பொலிவு பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

கடகம்

உடல் நலம் தேறிவரும். நண்பர்களில் ஒரு சிலரே உங்களிடம் உண்மையான அன்புடன் இருப்பார்கள். அவர்களில் ஒருவரே உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து உங்களுடன் அனுசரணையாக இருப்பார். மாணவர்களுக்கு கலகலப்பான சூழல் உருவாகும். ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவியும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

சிம்மம்

எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சித் தரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்கள் குறித்த நேரத்தில் வேலையை முடிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். குறுகிய தூர பயணம் ஆக்கம் தரும். சொந்தங்கள் அன்பு பாராட்டுவர். ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

அதிக சம்பளத்திற்காக புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

துலாம்

தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது. பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் குடும்பத் தலைவிகளுக்கு முடிவுகளை எடுக்க முழு சுதந்திரம் கிடைக்கும். பிடித்த நபரை சந்திப்பீர்கள். அவரிடம் தங்கள் மன்னிப்பினை கோருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

இன்று விசாகம், அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழ்ப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

தனுசு

இளைஞர்கள் நேர்முக தேர்வில் தேர்வு பெறுவர், கலைஞர்கள் எதிர் பாலினரிடத்தில் எச்சரிக்கைக் கொள்வீர்கள். மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்துவது நல்லது. காதல் ஜோடிகள் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர். மாணவர்கள் திட்டமிட்டுப் படிப்பர். மார்கெட்டிங் பிரிவினருக்கு வாடிக்கையாளர் அதிகரிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

மகரம்

வி.ஐ.பி.களுக்கு நெருக்கமாவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மீனம்

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வீர். நீண்ட நாட்களாக இருந்த ஒற்றைத் தலைவலி நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.கடன் பைசலாகும். குடும்பப் பிரச்சினை தீரும். மாணவர்கள் எழுதி பார்ப்பது நல்லது. நோய் தீரும், ஆரோக்கியம் கூடும்

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

Tags:    

மேலும் செய்திகள்