இன்றைய ராசிபலன் - 11.08.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்;

Update: 2024-08-11 01:58 GMT

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் ஆடி மாதம் 26-ம் தேதி ஞாயிறுக்கிழமை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.36 வரை சித்திரை பின்பு சுவாதி

திதி : இன்று அதிகாலை 3.36 வரை சஷ்டி பின்பு சப்தமி

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 07.45 - 08.45

நல்ல நேரம் மாலை: 03.15 - 4.15

ராகு காலம் மாலை: 04.30 - 6.00

எமகண்டம் மாலை: 12.00 - 1.30

குளிகை மாலை: 03.00 - 4.30

கௌரி நல்ல நேரம் காலை: 1.45 - 2.45

கௌரி நல்ல நேரம் மாலை: 1.30 - 2.30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: பூரட்டாதி

இன்றைய ராசிபலன்

மேஷம்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பள்ளியில் வைக்கக் கூடிய பெற்றோர்களின் கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பது நல்லது. உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். நினைத்த காரியம் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெற்றோரின் கனவு பலிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

வீட்டில் இதுநாள் வரை இருந்த குழப்பங்கள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத மனபயம் விலகும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பயணத்தின் போது தங்கள் உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் மற்ற உத்யோகஸ்தர்களிடம் எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது. தங்கள் சொந்த விசயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொலைபேசி மூலம் நட்பு பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

எதிர்பார்த்திருந்த காரியம் இனிதே முடியும். ஒரு சிலர் புதிய கிளைகளை துவங்க ஆயத்தமாவர். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடல் நலம் சுகம் பெறும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் இருந்துவந்த சந்தேகங்கள் விலகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். திருமணம் கோலாகலமாக நடக்கும். நண்பர்கள் தங்கள் நண்பர்கள் கூட்டத்தில் அனுசரித்துபோவது நல்லது. வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் தங்கள் சொல்படி நடப்பர். தங்கள் பிள்ளை அயல்நாடு செல்வார். அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். தொழில் சூடு பிடிக்கும். வெளியூர் பயணம் நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

துலாம்

பெண்களுக்கு அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். உறவினர்களால் நன்மை உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

விருச்சிகம்

உத்யோகஸ்தர்கள் இடமாற்றத்திற்கு முயற்சி செய்வர். பங்குச் சந்தை லாபம் தரும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். கணவன்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். பொறுமை மிக அவசியம். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

வெளியூர் பயணம் தடைபடும். மருத்துவர்கள் செழிப்பர். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும். மாணவர்கள் நன்கு படிப்பர். தேகம் பொலிவு பெறும். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். உடல் வலிமை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர். வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். யோகாவில் மனம் லயிக்கும். பொதுபணிகளில் உள்ளவர்கள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு. நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்

மீனம்

வீட்டில் தயாரிக்கும் ஊறுகாய், பருப்புப் பொடி போன்ற உணவு பொருட்கள் நல்ல விற்பனைக்கு உள்ளாகும். குடும்பத் தலைவிகளுக்கு நல்ல சேமிப்பு உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும். தேக ஆரோக்கியம் சிறப்பாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

Tags:    

மேலும் செய்திகள்