குரோதி வருடம் வைகாசி மாதம் 6-ம் தேதி ஞாயிறுக்கிழமை
நட்சத்திரம் : இன்று மாலை 06.08 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி.
திதி : இன்று பிற்பகல் 3.43 வரை துவாதசி பின்பு திரயோதசி
யோகம் : அமிர்த, சித்த யோகம்
நல்ல நேரம் காலை : 7.30 - 8.30
நல்ல நேரம் மாலை : 3.30 - 4.30
ராகு காலம் மாலை : 4.30 - 6.00
எமகண்டம் பிற்பகல் : 12.00 - 1.30
குளிகை மாலை : 03.00 - 4.30
கௌரி நல்ல நேரம் காலை : 10.30 - 11.30
கௌரி நல்ல நேரம் பிற்பகல் : 1.30 - 2.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் : அவிட்டம்
மேஷம்
எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். பழைய வாகனத்தை தந்துவிட்டு புதியதாக வாங்குவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புதுவீடு வாங்குவீர்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.
அதிர்ஷ்டநிறம் : பச்சை
ரிஷபம்
பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நலம் தரும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பதவி உயர்வு பற்றிய செய்திகள் மகிழ்ச்சியைத் தரும். அரசு தொடர்பான காரியங்கள் முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்டநிறம் : கடல் நீலம்
மிதுனம்
அக்கம் பக்கத்தினர், குடும்பத்தினர், நண்பர்களுடன் ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து சொத்து, பணம் வரும். உப தொழில்களுக்கு வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்டநிறம் : பச்சை
கடகம்
வசதி குறைவான வீட்டில் இருந்து பெரிய வசதியான வீட்டுக்கு குடிபோவீர்கள். உத்யோகத்தில் அதிக கவனம், நிதானம் தேவை. அலட்சியம், மறதியால் பொருள் இழப்பு உண்டாகலாம். குடும்பத்துடன் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
அதிர்ஷ்டநிறம் : ரோஸ்
சிம்மம்
கழகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள. உயர்பதவி மற்றும் பொறுப்பும் கிடைக்கும். உங்களுக்கு சேர வேண்டிய பங்குத் தொகை கை வந்து சேரும். முக்கிய பணிகளை முடித்துக் காட்டுவீர்கள். மனைவியின் உடல்நலம் காரணமாக அலைச்சல், மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். பணம் பல வழிகளில் வரும்.
அதிர்ஷ்டநிறம் : சிவப்பு
கன்னி
வியாபாரம் அமோகமாக இருக்கும். கையில் காசு, பணம் புரளும். பழைய கடன்கள் அடைபடும். டிசம்பர் மாதத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் சில மாற்றங்கள் வரும்.நண்பர்களிடையே அளவோடு பழகுவது நல்லது.உடல்நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டநிறம் : வான் நீலம்
துலாம்
வழக்குகள் பணப்பிரச்சனை காரணமாக தடைபட்டு இருந்த கட்டிட வேலைகள் மீண்டும் இனிதே தொடங்கும். பெண்களுக்கு வயிறு சம்பந்தமான உடல் உபாதைகள் வந்து நீங்கும். இளைஞர்களுக்கு வெளிநாடு வேலை வர வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது.
அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்
விருச்சிகம்
புதுமண தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவர். அதற்குண்டான வேலைகளை இன்று ஆரம்பிப்பர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று கூடுவார்கள். புதிய தொழில் துவங்குவர்.
அதிர்ஷ்டநிறம் : பச்சை
தனுசு
மற்றவர்களுக்காக வீடு மனை அடமான விசயத்தில் கையொப்பமிட வேண்டாம். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும்
அதிர்ஷ்டநிறம் : ஊதா
மகரம்
தங்கள் பிள்ளைகள் விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை.
நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும்.
அதிர்ஷ்டநிறம் : கிரே
கும்பம்
சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். பண விஷயத்தில சிக்கனமாக இருங்கள்.தம்பதிகளிடம் ஒற்றுமை உண்டாகும். அரசுத் தேர்வு எழுதும் வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும்.
அதிர்ஷ்டநிறம் : வெள்ளை
மீனம்
வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். கோயில் விழாக்களில் கலந்து கொள்வீர்கள். வெளியூர் செய்தி மகிழ்ச்சியைத் தரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல விதத்தில் முடியும்.
அதிர்ஷ்டநிறம் : சாம்பல்